தேசிய இளையோர் விழா

தேசிய இளையோர் விழா

நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி 25-வது தேசிய இளையோர் விழா, அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா புதுவையில் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கி வரும்16-ம் தேதி வரை நடத்தவிருந்த இந்த தேசிய இளையோர் விழாவில் நாடு முழுவதும் இருந்து 7,500 மாணவர்கள் பங்கேற்பதாக இருந்தது. புதுச்சேரியில், நடைபெறவுள்ள 25-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி   வைக்கிறார். இந்த விழாவை இணையத்தில் காணலாம்

 ‘‘தேசிய இளைஞர் விழா, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி, இளைஞர்களிடையே மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை பரப்புகிறது.

ஜனவரி 12-ம் தேதி தலைசிறந்த தத்துவஞானியும், சிந்தனையாளருமான சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நாம் கொண்டாடும் வேளையில், அவரது போதனைகள் மற்றும் இளைஞர் சக்தியைப் பற்றிய அவரது அசையா நம்பிக்கைகள், இந்தியாவில் மாறி வரும் காலச்சூழலைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

இந்த விழா இந்திய இளைஞர்களின் மனதை வடிவமைப்பதோடு அவர்களை தேச நிர்மாணத்திற்கான ஒருங்கிணைந்த சக்தியாக மாற்றியமைக்கும்.

மேலும், இவ்விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் சார்பில் புதுவையில் ரூ.122 கோடி முதலீட்டில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுஉள்ள தொழில்நுட்ப மையத்தையும், கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.23 கோடியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.