புதிய கூகுள் குரோம் லோகோ

புதிய கூகுள் குரோம்  லோகோ 

8 ஆண்டுகளுக்கு பின் லோகோவை மாற்றிய கூகுள் குரோம் லோகோ கூகுள் குரோம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ளது. கூகுள் நிறுவனம் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, தனது குரோம் லோகோவை மாற்றியுள்ளது.

லோகோவின் நிறங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இதில் உள்ள சிகப்பு, நீலம், பச்சை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களின் சேர்க்கை சற்று அதிகப்படுத்தப்பட்டு நிழல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக லோகோ அதிக மாற்றங்கள் இன்றி அதேசமயம் நேரலை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது.

புதிய மாற்றங்களின் படி விண்டோஸ், மேக் ஓஎஸ் என ஒவ்வொரு தளங்களிலும் குரோம் ஓஎஸ் வித்தியாசமாக காட்சியளிக்கும். மேக் ஓஎஸ் சாதனங்களில் லோகோ 3டி தோற்றம் பெற்று இருக்கிறது.

மேக் ஓஎஸ் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கூகுள் குரோம் பிரவுசரில் பீட்டா ஐகான் காட்சியளிக்கிறது. புதிய லோகோ பிப்ரவரி 4 முதல் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதனை தற்போது குரோம் கேலரியில் காண கிடைக்கிறது.

அடுத்த சில மாதங்களில் மற்ற அனைவருக்கும் இது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 மற்றும் 11 பதிப்புகள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன