சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி"

"சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி"
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணை களை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கி கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், நிலத்தில் இருந்து ஏவ முடியும்.
உலகின் அதிவேக சூப்பர் சானிக் ஏவுகணையாக பிரம்மோஸ் உள்ளது. இது ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக் கூடியது. பிரம்மோஸ் ஏவுகணைகளின் வேகம், சீறிப் பாயும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தரையில் இருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை மார்ச்23 வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
அந்தமான், நிகோபர் தலைநகர் போர்ட்பிளேரில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது என்று அந்த படைப்பிரிவு தெரிவித்துள்ளது.