தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகள்

தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகள்
 
தமிழக அரசு உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகள், சமூக நீதிக்காக பாடுபட்டு வரும் பெருமக்களுக்கு ஆண்டு தோறும் பொங்கல் திருநாளில் வழங்கப்படுகிறது.


2021 ஆண்டுக்கான விருது பெறுவோர்

'டாக்டர் அம்பேத்கர்' விருது -->மேனாள் நீதிநாயகம் (ஓய்வு) கே. சந்துரு
'தந்தை பெரியார்' விருது --> .திருநாவுக்கரசு


திராவிட இயக்க ஆய்வாளரும், சிறந்த எழுத்தாளருமான .திருநாவுக்கரசின் படைப்புகளை அனைவரும் கற்றுணரவேண்டும்.அடுத்தடுத்து வரும் எல்லாத் தலைமுறைகளும் திராவிட இயக்கம் குறித்து அறிய முற்படும் போது ஆய்வாளர் .திருநாவுக்கரசுவின் படைப்புகளையும், ஆவணத் தொகுப்புகளையும் கற்றுணர்வது இன்றியமையாத் தேவையாகும்.

காலங்காலமாக சமூக ஒடுக்குமுறையை எதிர்கொண்டு வாழ்ந்து வரும் பட்டியல் பழங்குடியினர், பட்டியல் சாதியினர் சமூகத்தின் வாழ்வுரிமைக்காக கல்லூரியில் பயிலும் காலத்தில் களப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் கே. சந்துரு, வழக்கறிஞர் பணியில் சட்டப் போராட்டமாக உயர்த்தி முன்னேறினார். அவரது நேர்மையும் , வெளிப்படை அணுகுமுறையும், சார்பற்ற நடுநிலையும் அவரை நீதி நாயகமாக உயர்த்தியது.