ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன் சிறப்பு மையம் பெங்களூருவில் திறப்பு

ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன் சிறப்பு மையம் பெங்களூருவில் திறப்பு

ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான சிறப்பு மையம் பெங்களூருவில் திறக்கப்பட்டது. அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை கர்நாடக அரசு ரூ.40 கோடி செலவில் உருவாக்கியுள்ள‌து.

உலகளாவிய அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் சந்தையில் 10 சதவீதமான இடத்தை இந்தியா கைவசம் வைத்திருக்கிறது. வரும் 2027ம் ஆண்டில் இது 20 முதல் 25 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இந்த துறையில் கர்நாடகா பெரும் ஆற்றலைக் கொண்டு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையமானது டிஜிட்டலில் ஆக்கப்பூர்வமான தொழில்கள் தொடங்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

இந்த மையத்தில் விர்ச்சுவல் (மெய்நிகர்) ரியாலிட்டி, டிஜிட்டல் கம்ப்ரஷன், போட்டோகிராமெட்ரி, கல்வியின் கேமிஃபிகேஷன், நிகழ்நேர மெய்நிகர் உற்பத்தி, பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து தனித்துவமான படிப்புகளை வழங்கும் பள்ளியும் இடம்பெற்றுள்ளது. .