டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு முதல் முறை பெண் துணைவேந்தர் நியமனம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குமுதல் முறை பெண் துணைவேந்தர் நியமனம்
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு(ஜேஎன்யூ) புதிய துணை வேந்தராக முதல் முறையாக பெண் பேராசிரியர் முனைவர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் (59) நியமிக்கப்பட் டுள்ளார்.இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.
சாந்திஸ்ரீ பன்னாட்டு உறவு
சாந்திஸ்ரீ ஜேஎன்யூ.வின் பன்னாட்டு உறவுகள் துறையில் எம்.பில் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்.
கடந்த 1988-ல் கோவா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியை தொடங்கியவர், 1993-ல் புனேபல்கலைக்கழகத்துக்கு மாறினார். பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளிலும் இருந்த சாந்திஸ்ரீ, யுஜிசி, இந்திய சமூக அறிவியல் மற்றும் ஆய்வுக் கவுன்சிலிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.
குடியரசு தலைவரால் பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி பிரதிநிதியாக உள்ளார் பேராசிரியர் சாந்திஸ்ரீயின் வழிகாட்டுதலின் கீழ் இதுவரை 29 மாணவ, மாணவிகள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவர், தற்போது, இந்திய அரசியல் அறிவியல் சங்கத் தலைவராகவும் உள்ளார்.
புனேவின் பேராசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ராணுவ உளவு பயிற்சி பள்ளியிலும் ஆசிய பசிபிக் பிராந்தியம் மற்றும் இந்திய பாதுகாப்பு குறித்தும் சாந்திஸ்ரீ உரைகளை நிகழ்த்தி உள்ளார். பல மொழி தெரிந்தவர் தெலுங்கு, தமிழ், மராத்தி, சம்ஸ்கிருதம், இந்தி மற்றும் ஆங்கிலம் எனப் பல மொழிகள் அறிந்தவராக உள்ளார்.
இவரது தாய், ரஷ்யாவில் பிறந்து அதன் புகழ்ப்பெற்ற கல்வி நிறுவனத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை பயிற்றுவித்துள்ளார். தமிழரான தந்தை முனைவர் பண்டிட், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தங்க பதக்கம் பெற்றவர்.