தேசிய அளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு 4-வது இடம்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தரவரிசையில், தேசிய அளவிலான மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கடந்த 2020-ம் ஆண்டுக்கான இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகதரவரிசையில் 8-வது இடத்தைபெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம், நாட்டில் உள்ள 67 வேளாண் நிறுவனங்களில் 8-வது இடத்தையும், தேசிய அளவிலான மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் 4-வது இடத்தையும், தென்னிந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே 2-வது இடத்தையும் பெற்றுள்ளது.