முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்-6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து: முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்
துபாய், அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பெரும் நிதி மேலாண்மை நிறுவனங்கள் தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டங்கள், சிறு துறைமுகங்கள் மேம்பாடு, உணவு பதப்படுத்துதல், தொழில் பூங்காக்கள் உருவாக்கக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்திட முன்வந்திருக்கின்றன.
ஜவுளித்துறை, மருத்துவ சேவைத் துறை, உணவு பதப்படுத்துதல், இரும்பு தளவாடங்கள் செய்தல் ஆகிய துறைகள் நிச்சயமாக வளர்ச்சி பெறும். அந்த வகையில், துபாய் பயணம் தமிழக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான அடித்தளத்தை அமைத்துள்ளது.
ஆறு மிக முக்கியமான தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) போடப்பட்டு இருக்கிறது.
* இரும்பு தளவாடங்கள் துறையில் இருக்கக்கூடிய நோபல் ஸ்டீல்ஸ் துறையோடு 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
*ஜவுளித் துறையைச் சார்ந்த White House நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
*உணவுத் துறையைச் சார்ந்த Transworld குழுமத்தோடு 100 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
* மருத்துவத் துறையைச் சார்ந்த Aster DM Healthcare நிறுவனத்தோடு 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
* சரக்கு போக்குவரத்து நிறுவனத்தைச் சார்ந்த Sharaf நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
* உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் கட்டுமானத்துறையைச் சார்ந்த Lulu நிறுவனத்தோடு 3,500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
இந்த ஆறு நிறுவனங்களுடன்
6,100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதன் மூலமாக
14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப் போகிறது. அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன