மத்திய பட்ஜெட் 2022

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நான்காவது மத்திய பட்ஜெட்டையும், நரேந்திர மோடி அரசின் 10வது பட்ஜெட்டையும் திங்களன்று தாக்கல் செய்தார்.  39.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிட்டது.

 

பட்ஜெட் 2022 சிறப்பம்சங்கள்:

 

1.சிப் வைத்த -பாஸ்ப்போர்ட்டுகள :

            மத்திய பட்ஜெட்டில் -பாஸ்போர்ட் வழங்கும் முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

v குடிமக்களின் வசதியை கருத்தில் கொண்டும் -பாஸ்போர்ட் சேவை.

v அமெரிக்கா உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் -பாஸ்போர்ட் சேவை உள்ளது.

v -பாஸ்போர்ட்கள் உடல் கடவுச்சீட்டுகளை விட பாதுகாப்பானதாக இருக்கு

2.புதிய டிஜிட்டல் நாணயம்:

             கிரிப்ட்டோகரன்சிகளுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் நாணயம் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டார்.

3. டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள்;

            மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitaraman) இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலில் டிஜிட்டல் கல்விக்கு தனி கவனம் செலுத்தியுள்ளார்.

4.மின் வாகனங்களுக்கு சார்ஜிங் நிலைய கொள்கை.

5. பள்ளி மாணவர்களுக்கு 200 சேனல்கள்:

               PM eVIDYA இன் 'ஒரே வகுப்பு, ஒரு டிவி சேனல்' நிகழ்ச்சி 12ல் இருந்து 200 டிவி சேனல்களாக விரிவுபடுத்தப்படும் என்று நிதித்துறை அமைச்சர  ீதாராமன் கூரியுள்ளார் .  இதன் மூலம் அனைத்து மாநிலங்களும் 1 முதல் 12 வகுப்புகளுக்கு பிராந்திய மொழிகளில் துணைக் கல்வியை வழங்க முடியும்.

6. 3 ஆண்டுகளில் 400 இரயில்கள :

               அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய தலைமுறை வந்தே பாரதம் ரயில்கள் தயாரிக்கப்படும்.

7. 25000 புதிய தேசிய நெடுஞ்சாலைகள :

              இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் 25 ஆயிரம் கிலோமீட்டர்கள் விரிவாக்கம் செய்யப்படுவதாக பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

8.   ஆர்&ி  பட்ஜெட் :

             இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.4.78 லட்சம் கோடியில் இருந்து அடுத்த நிதியாண்டில் ரூ.5.25 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் பாதுகாப்பு ஒதுக்கீடுகளை அறிவித்து, இறக்குமதியை குறைப்பதற்கும், பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை மேம்படுத்துவதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

9. ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு:

     நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு என்ற முறையை ஆறிமுகப்படுத்தியுள்ளார்.

10. விலை குறையும் பொருட்கள்:

             வைரங்கள்,ரத்தினங்கள்,மெத்தில் ஆல்கஹால்,செவித்திறன் கருவிகள்,தொலைபேசி சார்ஜகள், ஸ்மார்ட் வாட்ச்,விவசாய கருவிகள்,பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள்,..

11.விலை ஏறப்போகும் பொருட்கள்:

               குடைகள்,கவரிங் நகைகள்,கலப்படமில்லா எரிபொருள்,ஒலிபெருக்கி,ஹெடட்போன்,சூரிய மின்கலங்கள்,இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்.

13. தனிநபர் வருமான வரி:

                 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், வருமான வரி விலக்கு தொடர்பான எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை. எனவே, தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு எந்தமாற்றமும் இன்றி 2.50 லட்சமாக தொடர்கிறது.

                ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

14. எல். .ி  பங்குகள் விற்பனை:

              ஏர்-இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு கடந்தாண்டு விற்பனை செய்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனையை தொடங்க இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்துள்ளார்.

15. 5ஜி சேவை:

             மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ​​நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு முதல் நாட்டு மக்கள் 5ஜி சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.

16. 80 லட்சம் வீடுகள்:

           2022-23 நிதியாண்டில் பிரதமரின் அனைவருக்கும் வீடு ( PMAY) திட்டத்தின் கீழ் 80 லட்சம் கோடி வீடுகள் கட்டிமுடிக்க ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

17. கிரிப்டோகரென்சி :

    இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீடுகளுக்கு 30 சதவீத வரிகள் விதிக்கப்படும் எனவும், கிரிப்டோ முதலீடுகளுக்கு எந்தவொரு வரிச்சலுகைகளும் கிடையாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

18.58 பைசா வரி:

     அரசுக்கு வரும் 1 ரூபாயில், நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் 58 பைசா, கடன் பத்திரங்கள் மற்றும் ஏனைய கடன்கள் மூலம் 35 பைசா, பங்கு விலக்கு போன்றவை மூலம் 5 பைசா, கடன் அல்லாத மூலதனங்கள் மூலம் 2 பைசா கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது.