இன்றைய வரலாற்று தகவல்
* ஹைதர் அலி*(Hyder Ali)
🥀கோலார் மாவட்டத்தில் உள்ள புதிக் கோட்டை(Budikote) என்னுமிடத்தில் பிறந்தார்
🥀தந்தை- பத்தே முகம்மது தாய் -லால்பீ
🥀இவரது முன்னோர்கள் பஞ்சாபை சேர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.
🥀மைசூர் படைப்பிரிவில் பணியில் சேர்ந்தார்.
🥀1749ல் நடைபெற்ற தேவனஹல்லி போரில் வெற்றி பெற்றார்.
🥀இவரது வீர தீர செயலை கண்ட படைத்தலைவர் தேவராஜரும் நிதியமைச்சர் நஞ்சா ராஜாவும் பெரிதும் வியந்து ஐம்பது குதிரைகளையும் 300 வீரர்களையும் கொண்ட படைப் பிரிவுக்கு தலைவன் ஆக்கினார்.
🥀1755ல்திண்டுக்கல்லை நிர்வாகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
🥀ஹைதர் அலி பீரங்கிப்படை நிலையத்தையும் போர் ஆய்வுக்கூடத்தை நிறுவினார்
🥀1758இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் தோன்றிய படை கலகத்தை அடக்கினார்
🥀படை கலகத்தை உருவாக்கிய ஹரிசிங் என்பவரை கொன்று கலகத்தை அடக்கினார்.
🥀1759 மராத்தியர் மைசூர் மீது படையெடுப்பின்போது அதை முறியடித்தார்.
🥀இந்த செயலுக்காக மன்னர் கிருட்டிணராச உடையார் அவரது தைரியம் போற்றும் வகையில் பதே ஹைதர் பகதூர் என்ற பட்டம் சூட்டினார்.
🥀ஹைதர் பகதூர் என்றால் வெற்றி சிங்கம் ஹைதர் என்று பொருள்.
🥀தனக்கு எதிராக செயல்பட்ட தேவராஜரும் நஞ்ச ராஜாவையும் அடக்கி மன்னரை 1762இல் மைசூர் அரசனாக முடிசூட்டிக் கொண்டார்.
🥀 தனது ஆட்சிக்காலத்தில்40 நாட்கள் ஒரு முறை ஊதியம்தரும் முறையை நடைமுறைப்படுத்தினார்.
🥀 மாத முறை சம்பளத்தை அறிமுகப்படுத்திய இவர் பக்கோடா என்ற நாணயத்தை நடைமுறைப்படுத்தினார்.
ஹைதர் அலியின் வெற்றிகள்;
🌷பசாலத்ஜங்கிற்கு பதிலாக தும்கூர் மாவட்டத்திலுள்ள சீராவுக்கு தன்னை நவாப் ஆக்கிக்கொண்டார்.
🌷 ஹைதர் அலி கான் பகதூர் என்ற பட்டமும் பெற்றார்.
🌷சிதார். சீராக் கோட்டை. துர்க்கம். பெத்தனூர். சுந்தா. செரா.கனரா போன்ற இடங்களை வென்றார்.
🌷மேற்கண்ட வெற்றிகளில் பெத்தனூர் வெற்றி குறிப்பிடத்தக்க வெற்றியாகும். இதனை ஆண்ட அரசி வீம்மாஜி (1756-1763) ஆவார். இந்த வெற்றியின் மூலம் ஹைதர் அலிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பொற்காசுகள் கிடைத்தன 🌷🌷பின்னாளில் பெத்தனூர் ஐதர் நகர் என்று அழைக்கப்பட்டது.
🌷முதல் மைசூர் போர் (1767-69)
🌷இரண்டாம் மைசூர் போர்(1780-84) இவரது ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது.
🌷1767 ஆம் ஆண்டு ஜோசப் ஸ்மித் என்ற ஆங்கிலேயர் மைசூர் மீது படையெடுத்தார்.
🌷திருவண்ணாமலை. செங்கம் ஆகிய பகுதிகளில் போர் நடைபெற்றது.
🌷தளபதி ஸ்மித் உதவியாக கர்னல் உட் என்பவர் முதல் மைசூர் போரில் பங்கு கொண்டார்.
🌷ஹைதர் அலி பம்பாய் படையைத் தோற்கடித்து மங்களூர் கைப்பற்றினார் வரை நடைபெற்றது
🌷 ஹைதர் அலி சேலத்தில் உள்ள பாராமஹாலை கைப்பற்றினார்.
🌷ஹைதர் அலி ஈரோட்டில் தளபதி நிக்ஸனை தோற்கடித்தார்.
🌷முதல் மைசூர்போர் 4-4-1769 போர் முடிவுற்றது
🌷இப்போருக்கு பிறகு கரூர் தவிர்த்த மற்ற இடங்களில் ஆங்கிலேயருக்கு திருப்பி அளித்துவிட்டார். போர்க் கைதிகளையும் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
🌷இரண்டாம் மைசூர் போர்1780-84
நடைபெற்றது.
போரின் முக்கிய நிகழ்ச்சிகள் நாளை தொடரும்🌷🌷🌷🌷🌷
1)Source History of modern India-Raychoudhary
2)இந்திய வரலாறு- கோ தங்கவேலு
பிப்ரவரி 25
**********
1932- ஹிட்லர் ஜெர்மன் குடிமகன் ஆனார். ஆஸ்திரோ- ஹங்கேரி நாட்டின் ப்ரனவ்-ஆம்-இன் நகரில் 1889 ஏப்ரல் 20 இல் அடால்ப் ஹிட்லர் பிறந்தார். ( ஹிட்லரின் தந்தையார் பிறந்த போது, அவருக்குத் தந்தை யாரென்பது பதிவு செய்யப்படாமல், பின்னாளில் அவர் தாயாரை மணந்து கொண்ட ஜொஹான் ஜார்ஜ் ஹீட்லர் பெயரிலிருந்தே ஹிட்லர் என்ற குடும்ப பெயர், ஹிட்லரின் தந்தை பெயரில் சேர்க்கப்பட்டது. ஹீட்லர் என்றால் குடிசையில் வசிப்பவர் என்று பொருளாம்!)
ஹிட்லருக்கு மூன்று வயதானபோது, அவரது குடும்பம் ஜெர்மனியின் பவேரியாவிலுள்ள பசாவ் நகருக்கு குடிபெயர்ந்தது. இதனால், ஆஸ்திரியாவில் பேசப்பட்ட ஜெர்மன் மொழிக்கு பதிலாக, பவேரியாவில் பேசப்பட்ட ஜெர்மன் மொழியே ஹிட்லரின் மொழியாகி இறுதி வரை உதவியது.
முதல் உலகப் போரின் போது பவேரியா ராணுவத்தில், போர்க் களத்தில் ஓடிச் சென்று தகவல்களைத் தெரிவிக்கும் வீரராகப் பணிபுரிந்தார். போதிய கல்வியின்மையால் போருக்குப் பின்னும் ராணுவத்திலேயே தொடர்ந்த ஹிட்லருக்கு, ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஊடுருவும் உளவுப்பணி அளிக்கப்பட்டது. அக்கட்சியின் யூத, பொதுவுடமை எதிர்ப்புக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அதிலேயே சேர்ந்து, அதனை நாஸிக்கட்சியாக்கினார் ஹிட்லர். முசோலினியின் ரோம் நோக்கிய பயணத்தை போன்று, பீர் ஹால் ஆட்சிக் கவிழ்ப்பை முயற்சித்து சிறைக்குச் சென்ற ஹிட்லரை, ஆஸ்திரியாவிற்கு நாடுகடத்த முயற்சித்தபோது, பவேரியா ராணுவத்தில் பணியாற்றியதால், ஆஸ்திரியக் குடியுரிமை யை அவர் இழந்து விட்டதாக ஆஸ்திரியா நிராகரித்துவிட்டது. ஆஸ்திரியா குடியுரிமை தனக்கு தேவையில்லை என்று 1925ல் அறிவித்த ஹிட்லர்,7 ஆண்டுகள் எந்த நாட்டின் குடியுரிமையும் இன்றி நாடில்லாதவராகவே இருந்தார்.
ப்ரன்ஸ்விக் மாநிலத்தின் ஜெர்மன் பாராளுமன்ற குழுவிற்கு நிர்வாகியாக நியமிக்கப்பட்டதன் மூலம் ( மாற்று வழியில்) ஜெர்மன் குடியுரிமையைப் பெற்றார் ஹிட்லர். ஆஸ்திரியாவை ஜெர்மன் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து,1939ல் அவர் பிறந்த ப்ரனவ் நகர் அவருக்கு கவுரவக் குடியுரிமை வழங்கியது. அந்நகர் 2011ல் அதனை ரத்து செய்ததும், ஹிட்லர் ஆஸ்திரியக் குடிமகன் என்பது தெரியாமல் பவேரியா ராணுவத்தில் தவறுதலாக சேர்க்கப்பட்டதாக அந்நாடு 1924ல் வருந்தியதும் குறிப்பிடத்தக்கவை.
🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫
நன்றி வணக்கம் இராபர்ட் கென்னடி
மைசூர் அரசர்கள்(1399-2015)*
உடையார்கள் (wadeyars)
💐கன்னட மொழியில் உடையார் என்றால் தலைவர் அல்லது இறைவன் என பொருள்.
💐வரலாற்றுப் பதிவுகளின் படி அரச வம்சத்தின் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிடும்போது வோடியார் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர் . இது நவீன கன்னட ஒலிப்பெயர்ப்பில்
ஓடியார் என்றும் அழைக்கின்றனர்
💐1399 முதல் 2015 வரையிலான உடையார் வம்சம் மைசூரை ஆட்சி செய்தனர். அவர்களில்
💐யதுராயர்-1399-1423
💐முதலாம் சாமராசர்-1423-1459
💐முதலாம் திம்மராசர்-1459-1478
💐இரண்டாம் திம்மராசர்-1478-1513
💐மூன்றாம் திம்மராசர்-1513-1553
💐 இரண்டாம் திம்மநரசர்-1553-1572
💐நான்காம் திம்மநரசர்-1572-1576
💐ஐந்தாம் சாம ராசர்-1576-1578
💐முதலாம் ராசர்-1578-1617
💐 ஆறாம் சாமராசர்-1617-1637
💐இரண்டாம் ராசர்-1637-1638
💐முதலாம் நரச ராசர்-1638-1659
💐தொட்டதேவராசர்-1659-1673
💐சிக்கதேவராசர்1673-1704
💐இரண்டாம் நரச ராசர்-1704-1714
💐முதலாம் தொட்ட கிருஷ்ணராசர்1714-32
💐ஏழாம் சாமராசர்-1732-1734
💐இரண்டாம் கிருட்டிணனராசர்-1734-1766
நூல்
இந்திய வரலாறு தங்கவேலு
பிப்ரவரி- 26
தாராபாரதி அவர்கள் 26 பிப்ரவரி 1947 இல்திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார் . இவர் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன். பெற்றோர் துரைசாமி,புஷ்பம் அம்மாள். துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியாவர். ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தமிழ் நாடு அரசு 2010 – 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. இவருக்கு இரு புதல்வர்கள், விவேகாநந்தன் மற்றும் முனைவர் லோகுதுரை.புதிய விடியல்கள்
இது எங்கள் கிழக்கு
திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை)
விரல்நுனி வெளிச்சங்கள்
பூமியைத் திறக்கும் பொன்சாவி
இன்னொரு சிகரம்
கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் ஆகிய நூல்களை எழுதி உள்ளார். மே 13, 2000இல் இயற்கை எய்தினார். தமிழுக்கு தொண்டாற்றிய கவிஞரை அவரது பிறந்த நாளில் நினைவு கூறுவோம்…
கவிஞர்
முனைவர் ராஜா ஆ
ஒருங்கிணைப்பாளர்
பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம்
காலம் நினைவலைகள்
பிப்ரவரி 28
💀💀💀💀💀💀💀💀☠️☠️
1947- தைவானில் 228 நிகழ்வு ( பிப்ரவரி (2)-28) என்று குறிப்பிடப்படும் படுகொலைகளை, சியாங்-கை-ஷேக் தலைமையிலான சீன அரசால் நிகழ்த்தப்பட்டது. இந்தப் படுகொலையில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
1894-95ல் நடைபெற்ற முதல் சீன- ஜப்பானிய போரில் சீனா தோல்வி அடைந்தபோது ( போருக்கு தொடர்பில்லாத பகுதியான! ) தைவானை வற்புறுத்தி பெற்றுக் கொண்டது ஜப்பான். ஜப்பானின் ஆளுகையை ஏற்காமல், தைவான் மக்கள் உருவாக்கிய ஃபார்மோசா ( போர்த்துக்கீசியர்கள் வந்த போது தைவானுக்கு சூட்டிய பெயர் ) குடியரசை, 152 நாட்களில் ஜப்பான் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஜப்பானின் முதல் கடல் கடந்த குடியேற்றம் என்பதாலும், தைவான் மக்களை சமாதானப் படுத்த வேண்டும் என்பதாலும், பிற குடியேற்ற நாடுகள் வியக்கும் வண்ணம், “மாதிரி குடியேற்றமாக ” தைவானை மாற்றியது ஜப்பான்.
தைவானின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. துறைமுகங்கள், ரயில் பாதைகள் என்று உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. ஜப்பான் ஆளுகைக்கு முன் 164 கி.மீ. ஆக இருந்த சாலைகள்,4,456 கி.மீ.ஆக உயர்ந்தன என்பது மட்டுமே, தைவான் வளர்ச்சியை விளக்கிவிடும்.
இதனால் ஜப்பானியர்களை ஏற்க தொடங்கிய தைவான்மக்கள், ஜப்பானிய பெயர்களை சூட்டத் தொடங்கியதுடன், ஜப்பானிய மதமான ஷிண்டோவையும் ஏற்றனர். ஜப்பான் ஏராளமாக தொடங்கிய பள்ளிகள், மாணவர்களிடையே ஜப்பானிய ஆதரவு உணர்வினை விதைத்தன. இரண்டாம் உலகப் போர் தொடங்கும் போது பெரும்பாலான தைவான் மக்கள், ஜப்பான் மொழியையே நன்றாக பேசுமளவுக்கு, ஜப்பானியர்களை ஏற்றிருந்தனர்.
இந்நிலையில் தான் போரின் முடிவில் ஜப்பான் தோற்றதையடுத்து, தைவானை நிர்வகிக்கும் பொறுப்பை, நேசநாடுகள் சீனாவிடம் வழங்கின. சீனாவின் ஆட்சியதிகாரத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த கொமிண்ட்டாங் கட்சியினரும், அரசு அலுவலர்களும், சட்ட விரோதமாக சொத்துக்களைப் பறிமுதல் செய்வது உட்பட ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டது. ஏற்கனவே, ஜப்பானியர்களுக்கு ஆதரவாக இருந்த தைவானை போராடச் செய்தது. பிப்ரவரி 27ல் நடைபெற்ற ஓர் போராட்டத்தில் காவல்துறை சுட்டதில் காயமுற்றவர் இறக்க, மிகப் பெரிய அளவில் கூடிய மக்களை பல்லாயிரக்கணக்கில் சுட்டுக் கொன்றதே இந்நிகழ்வு. இதைத் தொடர்ந்து அடுத்த 38 ஆண்டுகளுக்கு தைவானில் நீடித்த “வெள்ளைப் பயங்கரம்” என்று அழைக்கப்படும் ராணுவ ஆட்சியே, உலகின் இரண்டாவது மிக நீண்ட கால ராணுவ ஆட்சி!
காலம் நினைவலைகள்
🪔 பிப்ரவரி 27🪔
—————————————-
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தின் ஆல்பிரட் பூங்கா,90 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் ( பிப்ரவரி 27 ) துப்பாக்கிகளின் முழக்கத்தால் அதிர்ந்து கொண்டிருந்தது. அந்த பூங்காவை சுற்றி வளைத்த போலீசார் 25 வயதுகூட நிரம்பாத அந்த இளைஞனைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார்கள். ” ஆங்கிலேய காவல் துறையிடம் ஒரு போதும் கைதாகவே மாட்டேன், சுதந்திர மனிதனாகவே மரிப்பேன் ” என்று சூளுரைத்திருந்த அந்த மாவீரன், கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் அமெரிக்கத் தயாரிப்பான “கோல்ட்” துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்தி கொண்டிருந்தான். இனி தப்பிக்க வழியில்லை என்ற நிலை வந்தபோது, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு வீரமரணம் அடைந்தான். அந்த இளைஞனின் பெயர் சந்திரசேகர் ஆசாத்.
மத்திய பிரதேசத்தின் பாவ்ரா கிராமத்தில், 1903 ஜூலை 23ல் பிறந்தார் சந்திரசேகர் சீதாராம் திவாரி. தமது 15வது வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் (1921) இணைந்ததாக கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். நடுவர் அவரிடம் அவரது பெயர், தந்தை பெயர் மற்றும் அவரது முகவரியை அடுத்தடுத்து கேட்க அதற்கு அவர் முறையே விடுதலை ( இந்தியில் ஆசாத்) சுதந்திரம் மற்றும் சிறை என்று பதிலளித்தார். உடனே நடுவர் அவருக்கு மிகுந்த தண்டனயுடன் கூடிய சிறை செல்லுமாறு உத்தரவிடவே, நான் அப்படி கூறினால் தான் நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள் என்று தான் கூறினேன் என்று கூற , அந்நடுவரகத்தில் உள்ளவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.அதற்கு நடுவர் மிகவும் கோபமடைந்து அவருக்கு 15 பிரம்படி கொடுக்க கட்டளையிட்டார். ஒவ்வொரு அடிக்கும் அவர் பாரத் மாதா கி ஜே என்று கூறினார். அதுவரை சந்திரசேகர சீதாராம் திவாரி என்ற பெயருடன் அறியப்பட்டவர் அதற்கு பிறகு சந்திரசேகர ஆசாத் என்று தன் பெயரை மாற்றி கொண்டார்.
அந்த காலகட்டத்தில் தீவிரமாக இயங்கி வந்த “இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன்” இயக்கத்தில் சேர்ந்து அரசு பணத்தை கைப்பற்ற ரயில் கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டார். அதன் தலைவர்கள் பலர் கொல்லப்பட்ட பின்னர், “இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன்”என்ற பெயரில், சந்திரசேகர ஆசாத், பகத் சிங், சுகதேவ் ஆகியோர் அந்த இயக்கத்தை புதுப்பித்தார்கள். 1928-ல் சைமன் கமிஷனுக்கு எதிராக போராட்டம் நடத்திய லாலா லஜபத் ராய், போலீசாரின் தடியடியில் பலியானதற்குப் பழிவாங்கும் விதத்தில் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி ஜேபி சாண்டர்ஸை அந்த இயக்கம் சுட்டுக் கொன்றது. இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சந்திர சேகர் ஆசாத், அலகாபாத் அல்பிரட் பூங்காவில் தன் இயக்கத்தவரான சுக்தேவுடன் பேசிக்கொண்டு இருந்த போது பிரிட்டிஷ் அரசின் காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். சுக்தேவை தப்பிக்க விட்டு விட்டு நீண்ட நேரம் காவல்துறையினரிடம் போராடினார். காலில் குண்டடிப்பட்டதால் ஆசாத்தால் அங்கிருந்து தப்பித்து செல்ல இயலாமல் போய்விட்டது. தன் துப்பாக்கியால் ஒருதோட்டா மட்டுமிருக்க காவல் துறையிடம் உயிருடன் பிடிபடகூடாது என்பதால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.
ஆனால் பிரிட்டிஷ் காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவே கூறினர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அதன் ஆவணங்கள் லக்னோ சிஐடி தலைமையகத்திலும் உள்ளது.
காலம் நினைவலைகள்
பிப்ரவரி 28
💀💀💀💀💀💀💀💀☠️☠️
1947- தைவானில் 228 நிகழ்வு ( பிப்ரவரி (2)-28) என்று குறிப்பிடப்படும் படுகொலைகளை, சியாங்-கை-ஷேக் தலைமையிலான சீன அரசால் நிகழ்த்தப்பட்டது. இந்தப் படுகொலையில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
1894-95ல் நடைபெற்ற முதல் சீன- ஜப்பானிய போரில் சீனா தோல்வி அடைந்தபோது ( போருக்கு தொடர்பில்லாத பகுதியான! ) தைவானை வற்புறுத்தி பெற்றுக் கொண்டது ஜப்பான். ஜப்பானின் ஆளுகையை ஏற்காமல், தைவான் மக்கள் உருவாக்கிய ஃபார்மோசா ( போர்த்துக்கீசியர்கள் வந்த போது தைவானுக்கு சூட்டிய பெயர் ) குடியரசை, 152 நாட்களில் ஜப்பான் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஜப்பானின் முதல் கடல் கடந்த குடியேற்றம் என்பதாலும், தைவான் மக்களை சமாதானப் படுத்த வேண்டும் என்பதாலும், பிற குடியேற்ற நாடுகள் வியக்கும் வண்ணம், “மாதிரி குடியேற்றமாக ” தைவானை மாற்றியது ஜப்பான்.
தைவானின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. துறைமுகங்கள், ரயில் பாதைகள் என்று உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. ஜப்பான் ஆளுகைக்கு முன் 164 கி.மீ. ஆக இருந்த சாலைகள்,4,456 கி.மீ.ஆக உயர்ந்தன என்பது மட்டுமே, தைவான் வளர்ச்சியை விளக்கிவிடும்.
இதனால் ஜப்பானியர்களை ஏற்க தொடங்கிய தைவான்மக்கள், ஜப்பானிய பெயர்களை சூட்டத் தொடங்கியதுடன், ஜப்பானிய மதமான ஷிண்டோவையும் ஏற்றனர். ஜப்பான் ஏராளமாக தொடங்கிய பள்ளிகள், மாணவர்களிடையே ஜப்பானிய ஆதரவு உணர்வினை விதைத்தன. இரண்டாம் உலகப் போர் தொடங்கும் போது பெரும்பாலான தைவான் மக்கள், ஜப்பான் மொழியையே நன்றாக பேசுமளவுக்கு, ஜப்பானியர்களை ஏற்றிருந்தனர்.
இந்நிலையில் தான் போரின் முடிவில் ஜப்பான் தோற்றதையடுத்து, தைவானை நிர்வகிக்கும் பொறுப்பை, நேசநாடுகள் சீனாவிடம் வழங்கின. சீனாவின் ஆட்சியதிகாரத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த கொமிண்ட்டாங் கட்சியினரும், அரசு அலுவலர்களும், சட்ட விரோதமாக சொத்துக்களைப் பறிமுதல் செய்வது உட்பட ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டது. ஏற்கனவே, ஜப்பானியர்களுக்கு ஆதரவாக இருந்த தைவானை போராடச் செய்தது. பிப்ரவரி 27ல் நடைபெற்ற ஓர் போராட்டத்தில் காவல்துறை சுட்டதில் காயமுற்றவர் இறக்க, மிகப் பெரிய அளவில் கூடிய மக்களை பல்லாயிரக்கணக்கில் சுட்டுக் கொன்றதே இந்நிகழ்வு. இதைத் தொடர்ந்து அடுத்த 38 ஆண்டுகளுக்கு தைவானில் நீடித்த “வெள்ளைப் பயங்கரம்” என்று அழைக்கப்படும் ராணுவ ஆட்சியே, உலகின் இரண்டாவது மிக நீண்ட கால ராணுவ ஆட்சி!
💀💀💀💀💀💀💀💀💀💀💀
நன்றி வணக்கம் இராபர்ட் கென்னடி
சர் ஜான் ஷோர் (Sir john Shore)
🏵️ இவர் 1751 இல் லண்டனில் பிறந்தார்
🌼ஆரோ பள்ளியில் பயின்றார்.
🌺கொல்கத்தாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியில் சேர்ந்தார்
🌺டாக்கா. பீகார் பகுதியின் வருவாய் ஆணையாளராக பணிபுரிந்தவர்.
🌺1787இல் வங்காள மாகாண அரசு குழுவில் உறுப்பினரானார்.
🌺 காரன்வாலிஸ் பிரபு காலத்தில் பீகார். ஒரிசா. வங்காளம் போன்ற பகுதியில் நிலசீர்திருத்தம் மேற்கொண்டார்.
🌺வாரன் ஹேஸ்டிங்ஸ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவர்
🌺1793-1798 வரை தலைமை ஆளுநராக பதவி வகித்தார்.
🌺இவரதுஆட்சிக்காலத்தில் தலையிடா கொள்கை கடைப்பிடித்தார்
🌺1793 ஆம் ஆண்டு பட்டய சட்டம் கொண்டுவரப்பட்டது.
🌺1795 ஆம் ஆண்டு Battle of Kharda நடைபெற்றது.
🌺 இப்போர் ஹைதராபாத் நிஜாம் மராத்திய ருக்கும் இடையே நடைபெற்றது.
🌺 ஹைதராபாத் நிஜாம் தோல்வி அடைந்தார். மராத்தியர் வெற்றி பெற்றனர்
🌺 சர் ஜான் ஷோர் தலையிடாக் கொள்கையின் காரணமாக நிஜாம் பகுதிகளில் பிரஞ்சு அரசின் தலையீடு அதிகமாயிற்று.
.🌺 பிரெஞ்சு தளபதி ராய்மாண்ட் தலைமையில் ஹைதராபாத் படைகளுக்கு மேற்கத்திய முறையில் போர் பயிற்சி அளிக்க ஏற்பட்டது இதனால் பிரெஞ்சுக்காரர்களின் நிர்வாக தலையீடு அதிகமாயிற்று.
*🌺1834இல் இறந்தார்.
source:🌻🌻🌻🌻🌻🌻🌻
History of modern India-Raychoudhary
கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு –29
..
இராகுலன்
கபிலவத்து நகரத்திற்குப் பகவன் புத்தர் வந்த ஏழாம் நாள், பிக்கு சங்கத்தாருடன் அரண்மனைக்குப்போய்ப் பகவன் புத்தர் உணவு கொண்டார். அப்போது யசோதரைத் தேவியார், தமது ஏழுவயதுள்ள இராகுல குமாரனை நன்றாக அலங்காரம் செய்து, “மகனே! அதோ பிக்குகள் சூழப்போகிற, பொன் நிறமாகப் பிரகாசிக்கிறவர் உன்னுடைய தகப்பனார். உனக்கு உரியதை அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்,” என்று கூறி அனுப்பினார். இராகுல குமாரன் புத்தரிடம் போய், மிக அன்போடு, “ஓ! சிரமணரே! தங்களுடைய நிழல் எனக்கு மிகவும் சுகமானது,” என்பது முதலாகச் சில வார்த்தைகள் கூறினார். பகவன் புத்தர் பிக்கு சங்கத்துடன் உணவு கொண்ட பிறகு அனுமோதனா தர்மோபதேசம் செய்து ஆசனத்திலிருந்து எழுந்து நடந்தார். இராகுல குமாரனும், “சிரமணரே! எனக்குக் கிடைக்க வேண்டியதைக் கொடுங்கள்,” என்று பின்தொடர்ந்து சென்றான்; புத்தரும், குமாரனை வரவேண்டாமென்று தடுக்கவில்லை. பார்த்துக்கொண்டிருந்தவர்களும் தடுக்கவில்லை. குமாரன் பகவரைப் பின்தொடர்ந்து விகாரைக்குச் சென்றார்.
பகவன் புத்தர், எனக்குப் போதி மண்டலத்திலே கிடைத்த ஏழுவிதமான உத்தம தனத்தை இவனுக்குக் கொடுப்பேன் என்று தமக்குள் நினைத்து, சாரிபுத்திர தேரரை அழைத்து, இராகுல குமாரனுக்குச் சந்நியாசம் தரும்படி சொன்னார். சாரிபுத்திர தேரர், “சுவாமி, எப்படிச் சந்நியாசம் கொடுப்பேன்?” என்று கேட்க, பகவர், திரிசரணத்தை எடுக்கச் செய்து ஸாமநேர சந்நியாசத்தைக் கொடுக்கச் சொன்னார். அவ்வாறே இராகுல குமாரனுக்குச் சந்நியாசம் கொடுக்கப்பட்டது.
இராகுல குமாரனுடைய சந்நியாசத்தைச் சுத்தோதன அரசர் அறிந்து மிகவும் விசனமடைந்தார். அவர் பகவன் புத்தரிடம் வந்து, வணக்கம் செய்து ஒரு பக்கத்திலே இருந்து, பெற்றோர்களுடைய அனுமதியில்லாமல் சிறுவர்களுக்குச் சந்நியாசம் கொடுக்கக் கூடாது என்னும் வரந்தரும்படி வேண்டிக்கொண்டார். பகவன் புத்தர் அதற்கு இணங்கிப் “பிக்ஷுக்களே! இனிப் பெற்றோருடைய அனுமதி கிடைக்காத சிறுவர்களுக்குச் சந்நியாசம் கொடுக்காதீர்கள்,” என்று கூறிச் சட்டம் செய்தார்.
அடுத்தநாள், சுத்தோதன அரசருக்கும் கௌதமி தேவிக்கும் பிறந்த நந்தகுமாரனுக்கு இளவரசப் பட்டமும், திருமணமும் நடக்க ஏற்பாடாகியிருந்தது. பகவன் புத்தர், நந்தகுமாரனுடைய மாளிகைக்குச் சென்று, உணவு அருந்தி பிக்ஷாபாத்திரத்தை நந்தகுமாரன் கையில் கொடுத்து முன்னே நடந்தார். நந்தகுமாரன் அவரைப் பின்தொடர்ந்து சென்றான். அப்போது, மணப் பெண்ணாகிய ஜனபத கல்யாணி என்பவள், நந்த குமாரனைக் கண்ணால் பார்த்து, “ஓ கணவரே! உடனே விரைவாகத் திரும்பிவாருங்கள்,” என்று கூறுவது போல நோக்கினாள். குமரனும் அதனை அறிந்து, ‘பாத்திரத்தை எப்போது வாங்கிக்கொள்வார்’ என்று நினைத்தவண்ணம் பின் தொடர்ந்தான்.
பகவர் விகாரைக்குச் சென்றார்: குமரனும் மரியாதையோடு பின் தொடர்ந்தான். அப்போது பகவர் நந்தனைப் பார்த்து, “நந்தா! நீ சந்நியாசம் பெறுவதற்கு விரும்புகிறாயா?” என்று கேட்டார். அவனும் “ஆம்,” என்று விடை கொடுத்தான். பகவன் புத்தர் நந்த குமாரனுக்குச் சந்நியாசம் கொடுத்தார்.
அரச குடும்பத்திலே பிறந்த அநேக அரசகுமாரர் பகவன் புத்தரிடம் வந்து தர்மங்கேட்டுத் துறவு பூண்டனர். பிறகு பத்தியர், அநுருத்தர், ஆனந்தர், பகு, கிம்பிலர், தேவதத்தர் என்னும் ஆறு குமாரர்களும் ஒரு வாரம் வரையில் தேவர்கள் போல அரச போகத்தை அனுபவித்துப் பிறகு, எட்டாம்நாள் உபாலி என்னும் அம்பட்டனை அழைத்துக் கொண்டு மள்ளர் நாட்டில் அனுபியவனம் என்னும் தோட்டத்தில் தங்கியிருந்த பகவன் புத்தரிடம் சென்றார்கள். சென்று துறவு கொள்வதற்குத் தங்களுடைய ஆடை அணிகளை யெல்லாம் களைந்து உபாலியிடம் கொடுத்தார்கள். உபாலி முதலில் அவைகளை ஏற்றுக் கொண்டான். பிறகு யோசித்துத் தானும் துறவு கொள்வதாகக் கூறினான். பகவன் புத்தரிடம் வந்தவுடன், அவர்கள் வணங்கித் தங்களுக்குத் துறவு கொடுக்கும்படி கேட்டார்கள், அன்றியும் முதலில் உபாலிக்குத் துறவு கொடுக்கும்படிச் சொன்னார்கள். அவ்வாறே இவர்கள் எல்லோருக்கும் சந்நியாசம் அளிக்கப்பட்டது.
ஜேதவன தானம்
பகவன் புத்தர் இராசகிருகம் அடைந்து சீதவனம் என்னும் இடத்தில் தங்கியிருந்தபோது, சிராவத்தி நகரத்தில் இருந்து வந்திருந்த சுதத்தன் என்னும் செல்வப் பிரபு, இராசகிருகத்திற்கு வந்திருந்தான். இவனுக்கு அனாதபிண்டகன் என்னும் பெயரும் உண்டு. இப்பிரபு உலகத்திலே புத்தர் தோன்றியுள்ளார் என்பதைக் கேள்விப்பட்டு, அடுத்தநாள் சீதவனத்துக்கு வந்து பகவரைக் கண்டு வணங்கி உபதேசம் கேட்டான். அடுத்த நாள் புத்த சங்கத்தாருக்குப் புத்தர் தலைமையில் பெருஞ் செல்வத்தைத் தானம் செய்தான். பிறகு சிராவஸ்வதி நகரத்திற்கு எழுந்தருள வேண்டுமென்று பகவரை வணங்கிக் கேட்டுக் கொண்டான்.
புத்தரை வரவேற்பதற்காக அனாத பிண்டகன் முன்னதாக சிராவத்தி நகரம் சென்றான். சென்று, ஜேதன் என்னும் அரசனுக்கு உரியதான ஜேதவனம் என்னும் தோட்டத்தைப் பதினெட்டுகோடி பொன் விலை கொடுத்து வாங்கி, அதில் விகாரையையும், அதன் நடுவில் பகவர் தங்குவதற்காகக் கந்தகுடியையும் தேரர்கள் தங்குவதற்குரிய இடங்களையும் அமைத்தான். பகவன் புத்தர் அங்கு எழுந்தருளியபோது அவரைச் சிறப்பாக வரவேற்று அவருக்கு ஜேதவனத்தையும் விகாரையையும் நீர் பெய்து தாரைவார்த்துக் கொடுத்தான். பகவன் புத்தர், அவைகளைப் பிக்குச் சங்கத்தின் சார்பாக ஏற்றுக்கொண்டார். பகவன் புத்தர், அங்கு மக்களுக்கு அறநெறிகளைப் போதித்துக் கொண்டிருந்தார்.
ஜீவகன்
அக்காலத்தில் ஜீவகன் என்னும் பெயருள்ள கை தேர்ந்த வைத்தியன் இருந்தான். இவன் உச்சயின் நாட்டின் அரசன் பிரத்யோதன் என்பவனுக்கும், மகத நாட்டு அரசன் விம்பசாரனுக்கும் வைத்தியனாக இருந்தான். பகவன் புத்தருக்கு வயிற்றுவலி ஏற்பட்டபோது இந்த ஜீவகன் மருந்து கொடுத்து நோயைப் போக்கினான். அன்றியும் பிரத்யோத அரசன் தனக்கு வெகுமதியாகக் கொடுத்த விலையுயர்ந்த ஆடைகளைப் பகவன் புத்தருக்கு அன்புடன் வழங்கினான்.
கொள்ளை நோய்
வெளுவனத்தில் தங்கியிருந்தபோது, வைசாலி நகரத்தார் அனுப்பிய தூதுவர்கள் வந்து, அந்த நகரத்தில் உள்ள கொள்ளைநோய்ப் பீடையை ஒழிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். ஆறுவகையான சமயத்துத் தலைவர்கள் வந்து அந்நோயைப் போக்க முயன்றனர். ஆனால், அந்நோய் நீங்கவில்லை. அவர்கள் வேண்டு கோளுக்கு இணங்கிப் பகவன் புத்தர் வைசாலிக்குச் சென்றார். சென்றவுடனே கொள்ளை நோய் நீங்கிற்று. நோயாளிகள் நலன் அடைந்தார்கள். பிறகு பகவன் புத்தர் அங்கு அரதன சூத்திரத்தை ஓதி உபதேசம் செய்தார். பெருந்தொகையானவர் பௌத்தரானார்கள். பிறகு பகவன் வெளுவனத்திற்குத் திரும்பி வந்தார்.
போரை நிறுத்தியது
அக்காலத்தில் சாக்கியருக்கும், கோலியருக்கும் பகை ஏற்பட்டுப் போர் செய்யத் தொடங்கினார்கள். நாட்டில் மழை பெய்யாமல் வற்கடம் ஏற்பட்டது. இரண்டு நாட்டாருக்கும் இடையே பாய்ந்து வயல்களுக்கு நீர்கொடுத்த உரோகிணி ஆற்றில் நீர் குறைந்தது. நிலங்களுக்கு நீரைப் பாய்ச்சுவதில் ஏற்பட்டதுதான் இந்தப் பகையும் போரும். இரு நாட்டாரும் போருக்கு ஆயத்தமாக நின்றபோது, பகவன் புத்தர் தமது ஞானக் கண்ணினால் இந் நிகழ்ச்சியையறிந்து போர்களத்தின் இடையே இரு தரத்தாருக்கு நடுவில் ஆகாயத்திலே நின்று, அறவுரை நிகழ்த்தினார். அதனைக் கேட்ட இருதரத்தாரும் போரை நிறுத்தினார்கள். அன்றியும் உபதேசங்கேட்டுப் பௌத்தரானார்கள்.
சுத்தோதனர் மோக்ஷம்
சில காலஞ் சென்ற பிறகு சுத்தோதன அரசர் நோய் வாய்ப்பட்ட செய்தி அறிந்த பகவன் புத்தர் சில பிக்குகளுடன் புறப்பட்டுத் தமது இருத்தியினாலே ஆகாயத்தில் பறந்து சென்று நோயாய்க் கிடந்த அரசருக்கு நிலையாமை என்பது பற்றி அறவுரை வழங்கினார். அதனைக் கேட்ட அரசர் அர்ஹந்த நிலையடைந்து புத்தரைத் தொழுது நிர்வாண மோக்ஷம் அடைந்தார்.
சுத்தோதன அரசர் இறந்தபிறகு, பகவன் புத்தரின் இளையதாயாரான பிரஜா கௌதமி தேவியார், துறவுகொள்ள விரும்பினார். அவர் ஆலவனத்தில் தங்கியிருந்த பகவரிடம் வந்து தமக்கு சந்நியாசம் கொடுத்துப் பிக்குணியாக்கும்படி கேட்டுக்கொண்டார். மகளிரைப் பௌத்தப் பிக்ஷுசங்கத்தில் சேர்க்க விருப்பம் இல்லாதபடியால் பகவர், அவருக்கு சந்நியாசம் கொடுக்க மறுத்து வைசாலி நகரத்திற்குப் போய்விட்டார்.
பிக்ஷுணிச் சங்கம்
ஆனால், பிரஜா கௌதமி தேவியாரும் மற்றும் சில ஸ்திரீகளும் தலைமயிரைச் சிரைத்துக் கொண்டு மஞ்சள் ஆடை அணிந்து, கால் நடையாக வைசாலி நகரத்திற்குப் பகவரை நாடிச் சென்றார்கள். வழி நடந்ததால் கால்கள் வீங்கி, புழுதி படிந்த ஆடையுடன் அவர்கள் அழுது கொண்டே பகவன் புத்தர் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பகவரின் அணுக்கத் தொண்டரான ஆனந்த மகாதேரர் கண்டு, அவர்களிடம் சென்று அவர்கள் வந்த காரணத்தையறிந்து, பகவன் புத்தரிடம் சென்று செய்தியைக் கூறி, அவர்களுக்காகப் பரிந்து பேசினார்.
பகவர், தமது பௌத்தச் சங்கத்தில் மகளிரைச் சேர்க்க விரும்பவில்லை. ஆனால், ஆனந்த மகாதேரர், பிரஜா கௌதமியார் புத்தருடைய குழந்தைப் பருவத்தில் அவரைப் போற்றி வளர்த்ததைச் சுட்டிக்காட்டி, அவரைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார். அதன்மேல் பகவர் பிக்குணிகளுக்கென்று எட்டு விதமான கடமைகளை வகுத்து அக்கடமைகளை ஏற்றுக் கொண்டால் பிக்குணிகள் சங்கத்தில் சேரலாம் என்று உத்தரவு கொடுத்தார். அந்தக் கடமைகளை ஏற்றுக்கொண்டபடியால் அந்த ஸ்திரீகள், சங்கத்தில் பிக்குணிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
பகவன் புத்தர் ஸ்திரீகளைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள உடன்பட்டபோதிலும் அதனால் நேரிடப் போகிற தீமையை நன்கு உணர்ந்தார். அவர் ஆனந்த மகா தேரரிடம், “பௌத்த சங்கத்திலே ஸ்திரீகள் சேர்க்கப்படாமல் இருந்தால், பௌத்த தர்மம் ஆயிரம் ஆண்டுகள் நிலைபெற்றிருக்கும். ஸ்திரீகள் சேர்க்கப்படுவதனாலே தர்மம் இப்போது ஐந்நூறு ஆண்டுகள் தான் நிலைத்திருக்கும்.” என்று அருளிச் செய்தார்.
விஞ்ஞானி அலெக்சாண்டர் பிளெமிங்
**********
தொழில்நுட்பக் கல்லூரி படிப்பை முடித்த பிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் பிளெமிங் அலுவலராக ச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்க வில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவருக்கு மிகத் தாமதமாக தனது 20 வயதில் மருத்துவ கல்லூரியில் சேர வழி செய்தது.
அலெக்சாண்டர் பிளெமிங் நுண்ணுயிர்க் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர்க் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடடேம் என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்
உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேறங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன்பு பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்த பின் குழந்தைகள் இறப்பதும் சர்வசாதாரணம். லேசான சிராய்ப்புகளும், காயங்களும் ,கீறல்களும்கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன.ஒரு நுண்ணுயிரியை வைத்து இன்னொன்றை கொல்லமுடிகிற பெனிசிலின் போன்ற நச்சு முறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது.
பென்சிலினைக் கண்டுபிடித்து நவீன நச்சு முறி மருந்துகள் யுகத்தை தொடங்கி வைத்த பெருமைக்குரிய விஞ்ஞானி தான் அலெக்சாண்டர் பிளெமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.
காலம் நினைவலைகள்
📇 மார்ச் —-1📇📇
—————————————-
1873- உலகின் முதல் பயன்பாட்டுச் சாத்தியமான தட்டச்சு எந்திரத்தை ரெமிங்டன் நிறுவனம் உற்பத்தி செய்யத் தொடங்கியது. உண்மையில் ஆயுதம் தயாரிக்கும் நிறுவனமான ரெமிங்டன், மாற்றுத் தொழில்களில் கால்பதிக்க விரும்பி,1870இல் தையல் இயந்திர தயாரிப்பில் இறங்கியிருந்தது.
1868இல் தன் தட்டச்சு எந்திரத்துக்கு காப்புரிமை பெற்ற கிறிஸ்டோபர் ஷோல்ஸ் அதை உற்பத்தி செய்ய முடியாமல் இருந்தார். அந்த காப்புரிமையை வாங்கி ரெமிங்டன் உற்பத்தி செய்தது.
ஏற்கனவே தையல் இயந்திரம் தயாரித்து கொண்டிருந்ததால், தட்டச்சு எந்திரத்திலும் தையல் இயந்திரத்தின் சாயல் இருந்தது. தையல் இயந்திரம் போன்ற ஸ்டேண்ட், வரி முடிந்ததும் தொடக்கத்திற்குத் தள்ளுவதற்கு காலில் மிதிக்கும் அமைப்பு, பூ வேலைப்பாடு போன்றவை இடம்பெற்றிருந்தன. உருளை வடிவ அச்சாகும் அமைப்பு, க்வெர்ட்டி விசை அமைப்பு என்று தற்போதைய தட்டச்சு எந்திரங்களில் உள்ள பெரும்பாலான அம்சங்களை இது அறிமுகப்படுத்தினாலும் பெரிய ( கேப்பிட்டல் ) எழுத்துக்கள் மட்டுமே அச்சிட முடியும். என்ன அச்சாகிறது என்பதை தட்டச்சு செய்பவர் பார்க்க முடியாது என்ற குறைகளும் இருந்தன.
1878இல் வந்த இரண்டாவது தலைமுறையில் சிறிய எழுத்துக்கள் அச்சிடும் வசதி சேர்க்கப்பட்டுவிட்டது. பல்வேறு தயாரிப்பாளர் களும் உற்பத்தி செய்யத் தொடங்கியதும் வேறுபாடுகளைக் களைய, 1910இல் பொதுவான வடிவமைப்பு உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து தட்டச்சு எந்திரங்கள் தற்போதைய வடிவை அடைந்தன.
பெண்களை அலுவலகப் பணிக்குக் கொண்டு வந்தது இந்தத் தட்டச்சு எந்திரங்களே! 1868இல் ஷோல்ஸ் உருவாக்கிய தட்டச்சு எந்திரம் வெற்றிகரமாக அமைந்தாலும், 15ஆம் நூற்றாண்டில் அச்சு எந்திரம் பயன்பாட்டிற்கு வந்ததைத் தொடர்ந்து, ஒற்றைப் பிரதியை எழுதுவது போன்றே அச்சிட வேண்டும் என்ற தேடல் தொடங்கிவிட்டது. 1575இல் இத்தாலிய அச்சக உரிமையாளர் ஒருவர் உருவாக்கிய ஓர் எந்திரத்தில் தொடங்கி,1870இல் டென்மார்க்கின் ஹேன்சன் என்ற தச்சர் உருவாக்கி, வணிகரீதியில் விற்பனையே செய்த எழுதும் பந்து என்ற எந்திரம் வரை, தட்டச்சு எந்திரம் 52 முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
தேசிய அறிவியல் தினம்
——–+++——-+++————-
சர் சி.வி.ராமன் விளைவு வெளியிட்ட நாள் பிப்-28
**””****”””””*
திருவானைக்காவலில் பிறந்து உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம் பிடித்த அற்புதமான தமிழர் சர் சி.வி.ராமன்.படிப்பில் படுசுட்டி, ஆங்கிலத்திலும், இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவருடைய உடல் நிலை தகுதிச் சான்றிதழ் அளிக்கவில்லை. எனவே, இந்தியாவில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகளை செய்து, நோபல் பரிசை வென்றார்.
அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கிய கருவிகளை வெளிநாட்டில் இருந்து தான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதில் சிக்கனமானவர். ஹௌராவில் இருக்கும் மார்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளை தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, இதை மட்டும் வாங்கி தாருங்கள் என்று பிர்லாவுக்கு கடிதம் எழுதினார்.அந்த கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகள் முடித்தார். நடுநீலக்கடல் வழியாக பயணம் சென்ற போது,” கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?” என்று யோசித்ததன் விளைவாக எழுந்ததே ராமன் விளைவு . கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தார் ராமன்.
ஆங்கிலேய அரசு அவரை நோபல் பரிசு வாங்க விடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வரவேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது.பிறகு தடைகளை மீறி அது அவரது கைக்குப் போய்ச் சேர்ந்தது. “ஆங்கிலேய அரசுக்கு எதிராக எதுவும் பேசக்கூடாது” என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், “ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலை போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்” என்று கம்பீரமாக ஆரம்பித்தே தன்னுடைய உரையைத் வழங்கினார் ராமன். ராமன் விளைவை கண்டுபிடித்த நாளே, நம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நந்தகுமார் வழக்கு
* நந்தகுமார் வங்காளத்தில் பிறந்தவர்
* ஆங்கிலேயே வருவாய்த்துறை அதிகாரியாக இருந்தவர்.
* மீர் ஜாபர்1763இல் நவாப் ஆனபோது அவருடைய முதலமைச்சரானார்.
* ஆங்கிலேயர்கள் அவர் மீது கொண்ட பகையால் அவரது பதவிக்கு முகமது ரசா கான் என்பவரை பதவியில் அமர்த்தினர்.
* இதனால் வாரன் ஹேஸ்டிங்ஸ் நந்தகுமாருக்கும் இடையே பகைமை ஏற்பட்டது.
*1775 ஆம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங்ஸூம் பார்வெலும் சேர்ந்து மோகன் பிரசாத் என்பவரின் தூண்டுதலால் நந்தகுமார் ஒருவரை ஐம்பதினாயிரம் ரூபாய் ஏமாற்ற பொய் கையொப்பமிட்டார் என்று குற்றம்சாட்டினர்.
* ஆங்கிலேய சட்டப்படி பொய் கையொப்பமிடும் குற்றவாளியை தூக்கிலிட வேண்டும்
* அதன்படி5-8-1775இல் பொய் கையொப்பமிட்டார் என்ற குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார்.
* வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது 22 குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டன.
* இவ்வழக்கை விசாரிக்க எட்மண்ட் பர்க் பாக்ஸ். ஷெரிடன். சர் கில்பர்ட். எலியட் ஆகியோர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
* இவ்வழக்கு வெஸ்ட் மினிஸ்டர் மாளிகையில் சான்சலர் பிரபு தர்லோ தலைமையில் நடைபெற்றது.
* இறுதியில் வாரன் ஹேஸ்டிங்ஸ் சூழ்நிலையால் சுயநலம் கருதாது பாடுபட்டார் என்று குழு தீர்ப்பளித்தது.
* விசாரணையில் அவர் பட்ட வேதனைகளையே அளித்த
தண்டனையாக கொண்டு அவரை விடுதலை செய்தனர்.
*1818இல் உயிர் நீத்தார்
* இவ்வழக்கில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைப் பற்றியும் இந்தியர்களைப் பற்றியும் இந்தியரின் பண்பாடுகளைப் பற்றியும் நன்கு அறிய
இவ்வழக்கு முக்கிய காரணமாக இருந்தது.
நூல்
Modern Indian History-V.D.Mahajan.
இந்திய வரலாறு-கோ. தங்கவேலு.